கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் !!
மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம், முருகனுக்கு விசேஷமானது. இந்த நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபாட்டால் முக்தி கிடைக்கும்.
கிருத்திகை அல்லது கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம். மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம், முருகனுக்கு விசேஷமானது. கார்த்திகை என்பது முருகனின் பெயர்களில் ஒன்றான கார்த்திகேயன் என்பதைக் குறிக்கும். இவையே மருவி கிருத்திகை என்று அழைக்கப்படுகிறது.
கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.
செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சனைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் மாதம் தோறும் வரும் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும். தலை குனிந்து வந்தால் தலை நிமிர்ந்து செல்லலாம்.
மேலும், இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவுண்ண வேண்டும்.