திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

நாம் வசிக்கும் வீட்டை வாஸ்துப்படி அமைக்க சில வழிமுறைகள்...!

வாஸ்து என்பது வாழும் இடம் என்பது பொருள்படும். ஜோதிட சாஸ்திரத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான இந்த வாஸ்து சாஸ்திரம். இப்பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள பஞ்ச பத தத்துவங்களின் தன்மைகளுக்கு ஏற்ப நாம் வசிக்கும் வீட்டை அமைத்து வாழ வழி சொல்லும் ஒரு அளவிடுகளின் கணித  அடிப்படையான அரும் பெரும் கட்டிட கலையாகும். இதை மிக சரியாக கையாள வேண்டும்.
* ஒரு வீட்டின் அமைப்பு சதுரம், செவ்வகம் போன்ற அமைப்புடையதாக இருப்பது அவசியம்.
* உடுக்கை வடிவம். முக்கோண வடிவம். வட்ட வடிவம், மற்றும் ஒழுங்கற்ற வடிவமுள்ள மனைகளை வாங்க கூடாது.
* ஒவ்வொரு அறைகளும் வாஸ்து சாஸ்திர அளவின் படி அமைந்திருக்க வேண்டும்.
* சூரிய வெளிச்சம் அதிக நேரம் வீட்டிற்குள் பட வேண்டும்.
* வீட்டிற்கு வெளியே அதிகமான வெட்ட வெளி இருக்க கூடாது.
* ஆற்று கரையோரங்களிலும், நீர் நிலைகள் நிறைந்த பகுதிகளிலும் வீடுகட்டி வசிக்க கூடாது.
* வீடு கட்ட ஆரம்பிக்க மிக சிறப்பு பெற்ற மாதங்கள் வைகாசி,ஆவணி, மாசி ஆகும்.
* வீடுகட்ட ஆரம்பிக்க 2வது வரிசையில் சிறப்பு பெற்ற மாதங்கள் சித்திரை, ஆடி, ஐப்பசி, கார்த்திகை, தை.
* வீடு கட்ட உகந்த கிழமைகள் திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி நலம்.
* வீட்டிற்குள் அமைக்கும் பொருட்கள் கூட வாஸ்து பலத்தை அதிகரிக்க செய்யும்.
* வீடு கட்ட ஆரம்பிக்கும் அன்று கீழ்காணும் நட்சத்திரங்கள் வரும் நாள் சிறப்பாகும். ரோகிணி.
 
வீடு ஆரம்பிக்க தவிர்க்க வேண்டிய கிழமையுடன் கூடிய நட்சத்திரம்:
 
ஞாயிற்றுக்கிழமையில் - பரணி நட்சத்திரம் வந்தால்
திங்கள்கிழமையில் - சித்திரை நட்சத்திரம் வந்தால்
செவ்வாய்க்கிழமையில் - உத்திராடம் நட்சத்திரம் வந்தால்
புதன்கிழமையில் - அவிட்டம் நட்சத்திரம் வந்தால்
வியாழன்கிழமையில் - கேட்டை நட்சத்திரம் வந்தால்
வெள்ளிகிழமையில் - பூராடம் நட்சத்திரம் வந்தால்
சனிக்கிழமையில் - ரேவதி நட்சத்திரம் வந்தால் தவிர்க்க வேண்டும்.