வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சனிபகவான் பார்வை கொடியது என கூறக் காரணம் என்ன...?

சனி ஆயுள்காரகன் என அழைக்கப்படுகிறார். அளவற்ற துன்பங்களுக்கு இவரே காரணம் ஆகிறார். சனி பகவான் நிறைய துன்பங்கள் கொடுத்தாலும் இவர் சிறந்த  நீதிமான் ஆவார். அளவற்ற துன்பத்தை அளிப்பது போலவே அளவற்ற நன்மையும் செய்வார். சனி கொடுத்த செல்வத்தை அவராலே கூட பிடுங்க முடியாது அந்த  அளவுக்கு நன்மையை தருவார்.
அலைச்சலையும், சஞ்சலத்தையும் குணமாக கொண்ட சனியானவர், மெலிந்த தேகத்தையுடையவனாகவும், நீண்ட சரீரத்தை கொண்டவனாகவும், வாத  ரோகங்களையும் நரம்பு தொடர்பான நோய்களையும் ஆள்பவனாக இருப்பான் என்கிறது.
 
சனிபகவான் மகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதி. அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சந்திரங்களுக்கு நாயகன். துலாம், சனிபகவானுக்கு உச்ச வீடு. மேஷம்  நீசம், நீசம் பெற்ற சனிபகவான் நன்மை தரமாட்டார். உச்சம் பெற்ற சனிபகவான் நன்மைகளை வாரி வழங்குவார்.
 
சனிபகவான் பார்வை கொடியது. சனிபகவானுக்கு சுபகிரகங்கள் பார்வை நன்மை செய்யும் இடமான 3, 6, 9, 10, ஆகிய இடங்களில் இருந்தால் அதிர்ஷ்ட  வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை.
 
ஒருவருக்கு சனி தசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசைஃபற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார். அடுத்து அதனை  இல்லாமல் போகச் செய்வார். முடிவில் அதனை வட்டியும் முதலுமாக உரியவருக்கே திருப்பிக் கொடுப்பார். இப்படி மனிதனை பக்குவப்படுத்தும் நடவடிக்கையை சனி பகவான் மேற்கொள்கிறார்.