செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக சிந்தனைகள்...!

ஒரு லட்சியத்தைத் தேர்ந்தெடுங்கள். அதன் வழியே மனதைச் செலுத்தி உங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்துங்கள். உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த கருத்து நிறைந்திருக்கட்டும்.
* நமக்கு கிடைப்பது வெற்றியோ தோல்வியோ அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். தன்னலம் கருதாமல் சேவையில் ஈடுபடுங்கள்.
 
* முதலில் நீ செல்ல வேண்டிய பாதையைக் கண்டுபிடி. அதன் பிறகு செய்யவேண்டியது எதுவும் இல்லை. கைகளைக் குவித்தபடியே கடவுளைச் சரணடைந்துவிடு. பாதையின் போக்கிலேயே லட்சியத்தை அடைந்து விடுவாய்.
 
* ஓய்வு ஒழிவில்லாமல் வேலை செய்து கொண்டே இரு. ஆனால், செய்யும் வேலையில் நீ கட்டுப்பட்டு விடாதே. அதற்குள் சிக்கிக்  கொள்ளாதே. இதுதான் கீதையின் வழி.
 
* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனை தெய்வமாகவும் உயர்த்துவதே ஆன்மிகப்பணியாகும்.
 
* ஆன்மிகம் நமக்கு சோறு போன்றது. மற்றவை எல்லாம் கறி, கூட்டுப் போலத்தான். நன்மை செய்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை.  மற்றவர்களுக்கு நன்மை செய்ய முடியாவிட்டால் மரணமடைந்து விடலாம்.
 
* முடிவான லட்சியம் என்ற ஒன்று இல்லாமல் போனால், நாம் ஏன் ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்? இன்பமாக இருப்பதுதான்  மக்களின் லட்சியம் என்றாக், நாம் நம்மை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொண்ட மற்றவர்களை ஏன் துன்பத்தில் ஆழ்த்திவிடக் கூடாது? அப்படிச் செய்வதில் இருந்து நம்மை தடுத்து நிறுத்துவதே ஒழுக்கம்தான்.