1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. Sri Balasubramanya Swami Karthikai Deepa thirunal special poojas...!!

ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கார்த்திகை தீபத்திருநாளையொட்டி விஷேச பூஜைகள்...!!

ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி
கரூர் நகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் பரிவாரத் தெய்வங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி முருகனுக்கு கார்த்திகை தீபத்திருநாளையொட்டி காலை முதல் இரவு வரை விஷேச அபிஷேகங்கள் மற்றும்  பூஜைகள்.
கரூர் நகரில் மையப்பகுதியில் உள்ள கரூர் மாரியம்மன் ஆலயத்தின் அருகே வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் பரிவார தெய்வங்களில் ஒன்றான, அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி முருகனுக்கு கார்த்திகை தீபத்திருநாளையொட்டி காலைமுதல் இரவு வரை பல்வேறு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றது. 
 
இந்நிலையில் மாலை முருகனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முருகனுக்கு விஷேச மகா தீபாராதனைகளும், விஷேச சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு முருகன் அருள்  பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஆலய ஸ்தானிக்கர் வசந்த் சர்மா சிறப்பாக செய்திருந்தார்.
 
அடுத்த கட்டுரையில்
செல்வம் நிலைக்க செய்யவேண்டிய வாஸ்து முறைகள் என்ன...?