1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By ஆனந்த குமார்

கரூர்: ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சஷ்டியை முன்னிட்டு மஹா தீபாராதனை நிகழ்ச்சி

கரூர் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சஷ்டியை முன்னிட்டு மஹா தீபாராதனை நிகழ்ச்சி - பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று முருகன் அருள் பெற்றனர்.
கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் அருகே வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில், பரிவார தெய்வங்களில் ஒன்றான, அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்கார நிகழ்ச்சிகளும், அதனை தொடர்ந்து, மஹா தீபாராதனையும் நடைபெற்றது. கோபுர ஆரத்தியும், நட்சத்திர ஆரத்தியும், கற்பூர ஆரத்திகளும் தொடர்ந்து சிறப்பு  மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இந்நிகழ்ச்சியில் ஆலய ஸ்தானிக்கர் வசந்த் சர்மா பங்கேற்று அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிக்கு வேதங்கள் பாடி, சிறப்பு பூஜைகள்  செய்தார். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்றனர்.