துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம், அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடி தான். எந்த இடத்தில் துளசிச் செடி வளர்ந்திருக்கிறதோ அங்கே மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்றுப்பட்டாலே பாவங்களும் நோய்களும் விலகி விடும். துளசி இலையைத் தெய்வப் பிரசாதமாக உண்பவர்க்கு சகல பாவங்களும் ...