திங்கள், 4 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கருட பகவான் பற்றிய சில அரிய தகவல்கள் !!

வானத்தில் கருடனைப் பார்ப்பதும் அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனமாகும். அதிகாலையில் நமக்குக் கருட தரிசனம் கிடைத்தால் நினைத்த காரியம் கை  கூடும்.

கருட புராணத்தை அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, கிரகணம், சிராத்தம் போன்ற முக்கிய தினங்களில் படிப்பது காரியத் தடைகளை அகற்றி ஜெயம் அளிக்கும்.
 
கருடனின் நிழல்பட்ட நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும். காரணம், வேத ஒலிகளுக்கு தாவரங்களை நன்கு வளர வைக்கும் சக்தி உண்டு.
 
கருடன் மட்டுமே இறக்கைகளை அசைக்காமல் பறக்கும் சக்தி உடையவர். எனவே உயர பறக்கும் போது இறக்கைகளை அசைக்காமல் இருந்தால் அது கருடன் என்று முடிவு செய்யலாம்.
 
கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் ஆகியவற்றை வாழைச்சாற்றில் கலந்து அவரது திருமேனியில் சாற்றி வேண்டிக் கொண்டால் அனைத்து இஷ்ட சித்திகளையும் எளிதில் அடையலாம்.
 
அமிர்தக் குடத்தை எடுத்துவர தேவலோகம் சென்ற கருடன், அங்குள்ள தர்பைப் புல்லையும் பூலோகத்திற்குக் கொண்டு வந்தார். அமிர்தத்துடன் தர்ப்பையையும் கொண்டு வந்ததால் அதனை அமிர்தவீர்யம் என்ற பெயரில் அழைக்கின்றனர்.
 
கருட தரிசனம் சிறந்த சமயோகித புத்தியையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் அளிக்கிறது. ஆயிரம் ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும்  ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது! தன்னிகரற்றது கருட தரிசனம்.
 
கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.
 
கெட்ட சகுணங்கள் துர்சேட்டைகள், துர் குறிகள் போன்ற அசுபங்கள் அனைத்தும் கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடிவிடும்.