துஷ்ட சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும் மூலிகை !!

Pei mirati
Sasikala|
துஷ்ட சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் நுழையாமல் இருப்பதற்கு நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ள பரிகாரங்கள் ஏராளம். அதில் ஒரு சிறந்த  சக்திவாய்ந்த மூலிகை இலை பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 

இந்த செடியினுடைய பெயரே பேய் மிரட்டி. இந்த செடியை பார்த்தால் பேய் மிரண்டு ஓடி விடும் என்பதும் இதனுடைய அர்த்தம். இந்த பேய் மிரட்டி செடிகளில் இருக்கும் இலைகளைப் பறித்து அந்த இலையை திரி போல சுருட்டி மண் அகல் தீபத்தில், எண்ணெய் ஊற்றி அந்த எண்ணெய்யில் இந்த பச்சை இலையை திரியாக  போட்டு, தீபம் ஏற்றினால் இந்த புகைக்கு வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் வெளியேறிவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது.
 
இந்த தீபத்தை நம்முடைய வீட்டில் நாள் கிழமை பார்க்காமல் ஏற்றக் கூடாது. குறிப்பாக இந்த பேய் மிரட்டி இலை தீபத்தை அமாவாசை மற்றும் பவுர்ணமி தினத்தன்று ஏற்றவேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் ஏற்ற வேண்டும். தவிர மற்ற நாட்களில் இந்த தீபத்தை ஏற்றுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.
 
பேய் மிரட்டி செடியின் இலைகளையும் வேரையும் எடுத்து வந்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி நிலை வாசல் படியில் தொங்கவிட்டால், வீட்டிற்குள் எந்த ஒரு  எதிர்மறை ஆற்றலும் நுழையாமல் இருக்கும். உங்களுடைய வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளுக்கு பேய் மிரட்டி இலை வேர் கொண்டு  தாயத்தை கூட போடலாம்.
 
குழந்தைகளை எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் தாக்காது. குழந்தைக்கு கண் திருஷ்டியும் படாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். மேலே சொன்ன  விஷயங்கள் அனைத்துமே நம் முன்னோர்களால் பின்பற்றி வந்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :