1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கடன் பிரச்சனைகளை விரைவில் தீர்க்கும் பரிகாரங்கள்....!!

கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.

ஸ்ரீநரசிம்மரின்‬ எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி, திருமண தடை விலகி  நன்மை பெறலாம்.
 
செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றிவழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும். ‎கொடுத்த‬ கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
‎சிவன்‬ கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு. ‪
 
‎பிரதோஷகாலத்தில்‬, ரிஷபா ரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் ஆயிரம் அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.
 
வெள்ளெருக்கு‬ விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால், ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று  விடும்.