1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வீட்டின் செல்வ வளத்தை அதிகரிக்கும் செண்பகப்பூ !!

தினம்தோறும் செண்பகப் பூவை மகாலட்சுமிக்கு சூட்டுவதால் வீட்டில் வறுமை நிரந்தரமாக அகற்றப்படும். செண்பகப் பூவானது சுக்கிரனுக்கு மிகமிக விருப்பமான பூ என்றும் சொல்லப்பட்டுள்ளது. 

சுக்கிர பகவானை நினைத்து இந்த பூவை மகாலட்சுமிக்கு வைத்து வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக வெல்ளிக்கிழமையன்று வரக்கூடிய சுக்கிர ஹோரையில், மகாலட்சிமியை நினைத்து பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
 
எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத துன்பங்களையும் தீர்த்து வைக்கும் இந்தப் பூவை குறிப்பிட்ட இந்த வெள்ளிக்கிழமை அன்று முருகப்பெருமானுக்கு சூட்டி வேண்டினால் விரைவாகவே உங்களது கஷ்டம் தீர்ந்து விடும்
 
வீட்டில் செண்பகப் பூ செடி இல்லாதவர்கள் கடையில் சொல்லி வைத்து வாங்கி, வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்தப் பூவை பூஜை அறையில் வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.
 
பூஜையில் வைத்த செண்பகப் பூ காய்ந்ததும், அந்த பூவை பூஜை பொருட்கள் போடும் குப்பையில் சேர்த்து விடுங்கள் அவ்வளவு தான்.