1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வீட்டில் நெல்லி மரம் வளர்ப்பதால் மகாலட்சுமியின் அருளை பெற்று தருமா...?

மகாலட்சுமி நெல்லி மரத்திலும் வாசம் செய்கிறாள். அந்த "நெல்லி" அருநெல்லி மரமல்ல, சாதாரண பெருநெல்லி மரமே ஆகும். நெல்லிக் கனியை ஆமலகம் என்று கூறுவார்கள்.

நெல்லியை அரைத்து தேய்த்துக் குளித்தால் உடம்பின் அழுக்குகளையும், நெல்லிக்கனியை சாப்பிட்டால் நம் உடம்புக்குள் உள்ள அழுக்குகளையும் நீக்கும். அதனாலயே அப்பழுக்கற்ற தூய தலைவன் ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கு அமலன் என்ற பெயர் உண்டு.
 
அதுமட்டுமல்ல தாத்ரீ பலம் என்பதும் நெல்லிதான். தாத்ரீ என்ற பதம் ஸ்ரீபூமாதேவியை குறிக்கும். ஆம் பூமாதேவியும் ஸ்ரீதேவியின் அம்சம்தானே. ஹரிபலம் என்றாலும் நெல்லிக்கனிதான் இது விஷ்ணுவைக் குறிக்கும் பெயராகும். எனவே பல இடங்களில் விஷ்ணு பக்தர்கள் நெல்லிமரத்தை மகாலட்சுமியாகவே எண்ணி வழிபடுகிறார்கள்.
 
நெல்லி மரத்தின் நிழலில் நின்று தானம் செய்வதும் அன்னமளிப்பதும் மிகுந்த சிறப்புமிக்கது. அதிக பலன்களை தரக்கூடியது. 
 
நெல்லி இலைகளால் ஸ்ரீவிஷ்ணுவையும் ஸ்ரீமகாலட்சுமியையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும்.