திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஸ்ரீ பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி வழிபாட்டை எவ்வாறு அனுஷ்டிப்பது...?

பைரவர் எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். 

காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது.
 
ஸ்ரீ பைரவருக்குப் பெளர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும், நல்லருள் கிட்டும். 
 
இலுப்பை எண்ணெய், விளக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம்.
 
ஓன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித் தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். 
 
ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.
 
அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், ஸ்வாதி, மிருகசீர்ஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். மற்றும் தொழிலில் லாபம் கிட்டும். 
 
சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.
 
ஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.