வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

காலையில் கண் விழித்ததும் இதை பார்ப்பதால் அதிர்ஷ்டம் உண்டாகுமா...?

தூக்கத்திலிருந்து விழிக்கும்போது இதையெல்லாம் பார்த்தா அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருமுன்னு ஒரு பெரிய பட்டியலையே நம்ம முன்னோர்கள் தயாரிச்சு கொடுத்திருக்காங்க. அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் முதன் முதலில் வலது உள்ளங்கையை கண்விழித்து பார்க்க வேண்டும். அவ்வாறு வலது உள்ளங்கையைப் பார்ப்பதால் அன்றைய நாள் முழுக்கவே மங்களகரமான காரியங்கள் நடக்குமாம்.
 
தூக்கத்திலிருந்து கண் விழிக்கும் போது கண்ணாடியில், உங்கள் முகத்தையே பார்த்தால் லட்சுமி கடாட்சம் ஏற்படுமாம். உங்களின் பாசத்திற்குரியவர்களான அம்மா, மனைவி, குழந்தைகள் ஆகியோரின் முகத்தில் விழிப்பதும் நல்லதாம். 
 
காலையில் எழுந்ததும் கண் விழித்து முதன் முதலில் சூரியனை தரிசிப்பது சிறந்தது. மேலும் தாமரைப் பூ, சந்தனம், கடல் மற்றும் அழகான இயற்கைக்  காட்சிகளை காலை கண் விழித்ததும் பார்ப்பதும் நல்லதாம். இது உடலுக்கும், மனதிற்கும் உற்சாகம் தந்து அன்றைய தினத்தை சிறப்பானதாக மாற்றும்.
 
மேலும் வயல், சிவலிங்கம், கோயிலின் ராஜகோபுரம் பசுமாடு, நறுமணம் வீசும் மலர்கள் நிறைந்த பூந்தோட்டம் ஆகியவற்றை காலையில் எழுந்ததும் கண் விழித்து பார்ப்பது மனதிற்கு உற்சாகத்தை தந்து அன்றைய தினத்தை இனிமையான நாளாக ஆக்குகிறது.