வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 15 ஜனவரி 2022 (10:14 IST)

முன்ஜென்ம பாவங்களை போக்கும் சனி மகா பிரதோஷ வழிபாடு !!

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும்.


இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். சனிப்பிரதோஷம் தினம் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

இன்று சனிப்பிரதோசம் இன்று அருகில் இருக்கும் சிவ ஆலயம் சென்று சனிபகவானை வணங்க சனி பகவானால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும்.

நமக்கு வரும் நோய்களும், துன்பங்களும் முன்ஜென்ம பாவத்தின் சம்பளமாக கிடைக்கிறது. அந்த பாவங்கள் தீர இப்பிறவியில் நிறைய நன்மைகளை செய்ய வேண்டும்.

ஆலய தரிசனம் செய்வதும், இறைவனுக்கு அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கிக் கொடுப்பதும் நமது முன்ஜென்ம பாவங்களை போக்கும். இதன் மூலம் நோய்கள் நீங்கும்.

முன்ஜென்ம பாவங்கள் நீங்கவும், நோய்கள் தாக்காமல் ஆரோக்கியமாக வாழவும் சனி மகா பிரதோஷ நாளில் சிவன், நந்திக்கு அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

வீட்டில்  விளக்கேற்றி இறைவனை வழிபடலாம். அருகில் இருக்கும் ஆலயங்களில் சிவ தரிசனம் செய்யலாம். சனிபகவானால் ஏற்படுத் தோஷம் நீங்கும்.

சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு உகந்தது. சனியின் பார்வையால் நிகழும் கெடுபலன் கள் நீங்க பிரதோஷ வழிபாடு மிகவும் உகந்தது.