Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடனை திருப்பி செலுத்த உகந்த மைத்ர முகூர்த்தம் !!

Written By Sasikala
Updated: வெள்ளி, 26 மார்ச் 2021 (18:24 IST)

கடன் தொல்லை என்பது ஒரு மனிதருக்கு வரக்கூடாத பிரச்சினைதான். வந்த பிறகு வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்று வருந்துபவர்கள், நம் முன்னோர்கள் கூறியுள்ள பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயமாக கடன் தொல்லைகள் தீரும்.
 
வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவிப்பவர்கள், மைத்ர முகூர்த்த நேரத்தில் கடன் தொகையில் ஒரு சிறு பகுதியை திருப்பி கொடுத்தால் விரைவில் கடன் முழுவதும் திருப்பிக் கொடுக்கும் வகையில் வாய்ப்பு வசதிகள் உருவாகும். 
 
அஸ்வினி நட்சத்திரமும் மேஷ லக்னமும், அனுஷ நட்சத்திரமும் விருச்சிக லக்னமும் கூடிய காலத்திற்கு ‘மைத்ர முகூர்த்தம்’ என்று பெயர். இந்த முகூர்த்தத்தில் கடனின் ஒரு சிறு தொகையை கொடுத்தால் கொடுக்க வேண்டிய கடன் தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் விரைவில் தீர்ந்துவிடும். அத்துடன் செவ்வாயின் நட்சத்திரமும் சனிக் கிழமையும் இணைந்த நாளில் மேஷ, விருச்சிக லக்னத்திலும் கடனை தீர்க்கலாம்.
 
செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். சூரிய, சந்திர கிரகணம் ஏற்பட்டு விலகும்  சமயம் கடனை திருப்பித் தரலாம். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித்தரலாம்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments