புதன், 18 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

அமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என கூறக்காரணம் என்ன?

இறை ஆராதனையும், முன்னோர் ஆராதனையும் ஒருசேர வந்தால் முன்னோர் ஆராதனைக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்று தர்மசாஸ்திரம் சொல்லும்.  அமாவாசை அன்று முன்னோர் ஆராதனைக்கு முதலிடம் அளிப்பதால் கோலம் போடுவதை தள்ளிப்போட வேண்டும்.
அமாவாசையன்று, பித்ருக்களுக்குப் பிடிக்காத சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டும் அதாவது கோலம், மணி அடிக்கும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி  போன்றவை பித்ருக்களின் வருகையைத் தடுப்பதாக அமையும் என்பதால். இவை பித்ருக்களுக்குப் பிடிக்காது. ஆகவே அமாவாசையன்று நம் வீட்டுக்கு  பித்ருக்கள் வந்துசெல்லும் வரை, அதாவது தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலிலோ பூஜையறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்புவதையும் (தெய்வங்களுக்குப் பூஜை செய்வதையும்) தவிர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். 
 
ஆகவேதான், அமாவாசையன்று முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை செய்தல் ஆகியவற்றைத்  தவிர்க்க வேண்டும். பித்ரு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர். வீட்டில் பூஜையறையில் கோலம் போட்டு தீபம் ஏற்றி மணியடித்து தெய்வ பூஜையை  வழக்கம்போல் செய்யலாம்.