ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

பித்ரு பூஜை செய்ய ஏற்ற தினம் எது தெரியுமா?

பித்ரு பூஜை செய்ய, தர்ப்பணம் கொடுக்க வசதி இல்லை என்று நினைக்கக்கூடாது. உள்களால் என்ன முடியுமோ, அதை மட்டும் செய்யுங்கள் போதும். பித்ருக்களை வழிபட மந்திரம் தெரிந்திருக்க வேண்டும், ஐதீகம் புரிய வேண்டுமே என்று சிலர் தவிப்பார்கள், தயங்குவார்கள். அத்தகைய தவிப்போ, தயக்கமோ  தேவை இல்லை.
தாயே தந்தையே நான் கொடுக்கும் இந்த தண்ணீரையும், எள்ளையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னால் கூட போதும். உங்கள் பெற்றோர் அல்லது முன்னோர்கள் மனம் குளிர்ந்து போவார்கள். எனவே பித்ரு பூஜைகள், தர்ப்பணம், சிரார்த்தம் செய்யாமல் இருந்து விடாதீர்கள். அதிலும் வரும் மகாளய  அமாவசை தினம் மகிமை வாய்ந்தது. அன்று நீங்கள் செய்யும் தர்ப்பணமும், சிரார்த்தமும் நிறைவான பலன்களை தர வல்லது.
 
மகாளய அமாவாசை ஆண்டுக்கு ஒரு தடவையே வரும். இந்த அமாவாசை தினத்தன்று செய்யப்படும் தர்ப்பணம் மிக எளிதாக, விரைவில் நம் முன்னோர்களை சென்று சேர்ந்துவிடும். இந்த ஆண்டு மகாளய அமாவாசையை தவற விட்டால், மீண்டும் இந்த வாய்ப்பு அடுத்த ஆண்டுதான் கிடைக்கும்.