செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By
Last Modified: திங்கள், 27 நவம்பர் 2017 (13:36 IST)

மந்திரங்கள் என்பது என்ன? அவை எங்கிருந்து பெறப்படுகிறது?

மந்திரம் என்பது அப்படி இல்லையே கண்ணுக்கும், காட்சிக்கும் புலப்படாத சூட்சமம். மந்திரங்கள் என்பது ஓசைகளின்  கூட்டமைப்பு. ஓசைகள் இல்லாமல், உலகம் இல்லை. உயிர்கள் இல்லை. உடலும் இல்லை. இந்த உலகில் காணப்படும் அனைத்துமே ஓசையிலிருந்து தான் வந்ததாகும். 
கிறிஸ்தவ மதமும் கூட, இதை ஒத்துக்கொள்கிறது. விவிலியம் முதலாம் அதிகாரத்தில், ஆதியில் வார்த்தை இருந்தது. அந்த  வார்த்தை தேவனாக இருந்தது என்று வருகிறது. இதைதான் இந்து மதம் விவிலிய காலத்து முன்பே நாத விந்து என்றது.  இறைவனை வேத மந்திர சொரூபன் என்றது.
 
ஓசைகள் ஒன்று என்றாலும், சமுத்திரத்தில் பல துளிகள் சேர்ந்து ஒரு பேரலையை உற்பத்தி செய்வது போல, ஓசையிலும் பல சிறிய ஓசைகள் உண்டு. அவைகள் எண்ணிக்கையில் அடங்காதவைகள். நேற்று பிறந்த, இன்று பிறந்திருக்கிற, நாளை  பிறக்கப்போகிற அனைத்து மனிதர்களுக்குமே தனித்தனியான பிரத்தியேகமான ஓசைகள் இருக்கின்றன. இப்படி நான் மட்டும்  கூறவில்லை. நமது வேதங்களும், சாஸ்திரங்களும் கூறுகின்றன. 
 
மனிதனின் லெளகீக தேவைகளை பூர்த்தி செய்யும் மந்திரங்களையும் மூன்று பகுதிகளாக பிரித்தார்கள். புலன்கள் ஒவ்வொன்றிற்கும் ஒன்றோடு ஒன்று கலந்து பல்வேறுபட்ட கலவைகள் இருப்பது போலவே மந்திரங்களுக்கும்,  லட்சக்கணக்கான கலவைகள் உண்டு.
 
மந்திரங்கள் தானாக தோன்றிய சுயம்பு. எப்போதுமே பிரபஞ்ச வெளியில் இருந்து கொண்டே இருக்கும். சாஸ்வதம் ரிஷிகளும், ஞானிகளும் அந்த சாஸ்வதத்தை காதுகளால் மட்டும் கேட்கவில்லை. கண்களாலும் பார்த்தார்கள். அதனால் தான், அவர்களுக்கு  மந்த்ர த்ரஷ்டா என்று பெயர்.
 
வேத மந்திரங்கள் தவிர பல ரிஷிகள் தங்களது தவ வலிமையால் கண்டறிந்த மந்திரங்கள் நிறைய உண்டு. அவைகளை  கொண்டு தான் மந்திர சாஸ்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மந்திரம் தேவதா மந்திரம், பாராயண மந்திரம், பீஜ மந்திரம்  என்ற மூன்றுவகை இருக்கிறது.