1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

எந்த வெள்ளிக்கிழமை எந்த அம்மனுக்கு உரியது என்று பார்ப்போம்...!!

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அம்மனுக்கு உகந்தது. அந்த வெள்ளிக்கிழமைக்குரிய அம்மனை வேண்டினால், நிச்சயம் நினைப்பது நிறைவேறும் என்பது ஐதீகம். 

முதல் வெள்ளிக்கிழமை
 
சுவர்ணாம்பிகை : ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையானது சுவர்ணாம்பிகை அம்மனுக்கு உரியது. சுவர்ணாம்பிகை அம்மன் பார்வதி தேவியின் ஒரு வடிவம். எனவே, ஆடி மாத முதல் வெள்ளியின்போது, சுவர்ணாம்பிகை அம்மனை மனம் உருகி வேண்டினால், வீட்டில் செல்வ வளம் பெருகும்.
 
இரண்டாம் வெள்ளிக்கிழமை
 
அங்காள அம்மன் : ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை, அங்காள அம்மனுக்கு உகந்தது. காளி தேவியின் மற்றொரு வடிவம்தான் அங்காள அம்மன். ஆடி மாத இரண்டாம் வெள்ளியின்போது அங்காள அம்மனுக்கு பூஜை செய்து வணங்கி வந்தால், புத்திக்கூர்மை அதிகரிப்பதோடு, வலிமையும், வீரமும் அதிகரிக்கும்.
 
மூன்றாம் வெள்ளிக்கிழமை
 
காளிகாம்பாள் : ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையானது அன்னை காளிகாம்பாளுக்கு உகந்தது. இந்த அம்மன் பார்வதி தேவியின் மற்றொரு வடிவம். எனவே, காளிகாம்பாளை மூன்றாம் வெள்ளிக்கிழமையின்போது வேண்டினால், தைரியம் அதிகரிப்பதோடு, ஆரோக்கியமும் மேம்படும்.
 
நான்காம் வெள்ளிக்கிழமை
 
காமாட்சி அம்மன் : ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையானது காமாட்சி அம்மனுக்கு உகந்தது. இவர் சக்தியின் ஓர் வடிவம். இவரை ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையின்போது வணங்கினால், நம்மை சுற்றியுள்ள தீய சக்தி நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
 
ஐந்தாம் வெள்ளிக்கிழமை
 
மகாலட்சுமி: ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி விஷ்ணு பகவானின் மனைவியான மகாலட்சுமிக்கு உரியது. இந்த கடைசி வெள்ளிக்கிழமையின்போது தான் வரலட்சுமி பூஜை நடைபெறும். இந்த பூஜை திருமணமான பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

திருமணமான பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரித்து, நீண்ட நாட்கள் சுமங்கலியாக இருப்பதற்கு, ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையின்போது நோன்பு இருந்து, மகாலட்சுமிக்கு பூஜை செய்து, படையல் படைத்து, சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பார்கள்.