புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பிரச்சனைகள் தீர தீப வழிபாட்டினை எவ்வாறு முறையாக மேற்கொள்வது தெரியுமா...?

கிழக்குத் திசையில் தீபம் ஏற்றி வைத்தால் வீட்டில் பீடை அகலும். துன்பங்கள் அகலும். மேற்கு திசையில் தீபம் ஏற்றி வைத்தால் சனி தோஷம், கிரகதோஷம், சல்லிய தோஷம், பங்காளிப்பகை, கடன் தொல்லை ஆகியவை தீரும்.

வடக்குத் திசையில் தீபம் ஏற்றி வைத்தால் திருமணத் தடை, கல்வித் தடை நீங்கும். செல்வம் உண்டாகும். தெற்குத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது. இது அசுப காரியங்களுக்கு மட்டுமே. 
 
தெற்குப் பார்த்த வீட்டில் குடியிருப்பவர்கள் காலை, மாலை வீட்டின் முன் விளக்கேற்றி வைக்கும்போது அது கிழக்குத் திசை பார்த்து இருக்க ஏற்றி வைக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை பார்க்க ஏற்றி வைக்கக் கூடாது.
 
ஒரு முகம் ஏற்றி வைத்தால் மத்திம பலன் கிடைக்கும். இரண்டு முகங்கள் ஏற்றி வைத்தால் குடும்ப ஒற்றுமை உண்டாகும். மூன்று முகங்கள் ஏற்றி வைத்தால் புத்திரனால் சுகம் பெறலாம்.
 
நான்கு முகங்கள் ஏற்றி வைத்தால் பசு போன்ற செல்வம் தரும். ஐந்து முகங்கள் ஏற்றி வைத்தால் செல்வத்தைப் பெருக்கும். ஒரு முகம் ஏற்றினால் கிழக்குப் பார்த்து விளக்கினை வைக்கவும்.
 
நவகிரக தோஷம் விலக அரசடி விநாயகருக்கு சதுர்த்தி திதி அல்லது ஞாயிற்றுக்கிழமை மூன்று அகலில் ஒவ்வொன்றின்  வீதம் தேங்காய் எண்ணெய். நல்லெண்ணெய். பசு நெய் இவைகளை தனித்தனியே ஏற்றி வழிபட கிரக தோஷம் விலகும்.
 
சித்திரை, ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமையில் ராகுகால வேளையில் சிவாலயத்தில் உள்ள அன்னை துர்க்கைக்கு 9 அகலில் 9 வகை எண்ணெய் தனித்தனியே ஊற்றி 9 வகை கலர் திரி ஒவ்வொன்றிலும் ஒரு கலர் திரி வீதம் போட்டு தீபம் ஏற்றி அன்னையை வழிபட தீரா பிரச்சினையும் தீரும்.