1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (13:21 IST)

பங்குனி உத்திரம் நாளின் சிறப்புக்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

பங்குனி விரதம் அனுஷ்டிப்பவர்கள் அன்றைய நாள் முழுவதும் விரதமிருந்து இஷ்ட தெய்வத்தையும், குலதெய்வத்தையும் வணங்கி வழிபடலாம்.


பங்குனி உத்திரம் என்பது பௌர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளாகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும் போது தோன்றும் பௌர்ணமி நிலவு மிகப்பெரியதாகவும் மிகப்பிரகாச மாகவும் தோன்றும். மற்றொரு சிறப்பு என்னவென்றால், தமிழ் மாதங்களில் பனிரெண்டாவது மாதம் பங்குனி, அதே போல் நட்சத்திர வரிசையில் பனிரெண் டாவது நட்சத்திரம் உத்திரம்.

பங்குனி உத்திரத் திருவிழாவின் நாயகனான முருகப்பெருமான்-தெய்வானையை திருமணம் செய்து கொண்டதும் இந்த நன்னாளில் தான். அதோடு ஸ்ரீவள்ளிக்குறத்தி அவதரித்த நாளும் இந்த நாள் தான்.

எம்பெருமான் சொக்கநாதர் -அன்னை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றதும் பங்குனி உத்திர நாளில் தான். சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரருக்கு மதுரையில், சிவபெருமான் அன்னை பார்வதி தேவியோடு மணக்கோலத்தில் காட்சியருளியதும் இந்த நன்னாளில் தான்.

இதனால் தான் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள கோயில்களில் எல்லாம் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் என்ற பேரில் பத்து நாட்கள் திருவிழா, தேரோட்டம், தீர்த்தவாரி, சுவாமி- அம்பாள் திருக்கல்யாண உற்சவம் என சகலமும் நடைபெறும்.