வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

இறந்தபின் மறுபிறப்பு உண்டா?; சித்தர்கள் கூறுபவை.....!

பிரபஞ்சம் உருவாகும் முன் இருந்த இறைவன் ஓம் என்ற பெருவெடிப்பாகத் தன்னைத் தான் பிறப்பித்துக்கொண்டான். அப்பொழுது அகார, உகார, மகார, நாத, விந்து என்ற பஞ்ச வித்துக்கள் தோன்றின. இவையே பஞ்ச பூதங்களாகின. இதில் அகார, உகார என்பவை சட நிலை உடையவை நாத விந்து என்பவை உயிர்  ஆற்றல் சார்ந்தவை. 

அகார உகார சேர்க்கையால் சடம் என்ற பிரபஞ்சமும், பல்வகை உடல்களும் தோன்றின. அதன் தன்மைக்கு ஏற்ப உயிர் உடலுடன் சேர்ந்தது.  இவை நால்வகை யோனிகளில், எழுவகைப் பிறப்பாயின. இதில் மனிதன் இறைவனின் மாறுபட்ட பதிப்பாக 96 தத்துவங்களுடன் உருவானான். இதில் ஒன்பதாம் நிலை அறிவு பெற்றவனே யோகபாதைக்குத் தகுதியானவன். 
 
இறந்தவர் என்ன ஆவார்கள் ?
 
உடல் உயிரை ஏற்கும் நிலை இல்லை என்றாலும், உயிரை உடலுடன் இணைக்கும் சக்தி குறைவுபட்டாலும். அல்லது பிரபஞ்ச உயிர் சக்தி  கிடைக்காவிட்டாலும், உடலியக்கம் நின்றுவிடும். இதுவே மரணம். மரணத்தின் முடிவில் உயிர்சக்தி நாத விந்தாக பிரபஞ்சம் சேரும். உடல் என்ற சடம்  பஞ்சபூதமாகப் பிரிந்து அகார உகாரமாக பிரபஞ்சத்தில் சேரும். மீண்டும் இவை நால்வகை யோனி எழுவகைப் பிறப்பு எடுக்கும். இது உயிரின் சுழற்சி.
 
இந்தச் சுழற்சியை சித்தர்கள் பலபிறவிபெற்று மனிதப்பிறவி அடைந்ததாகச் சொல்வார்கள். இந்தப் பிறவிச் சுழற்சியை நிறுத்தி, மரணம் அடையாமல் இருப்பது மரணமில்லாப் பெருவாழ்வு நிலை அல்லது கூடு உடையா நிலை அல்லது காயசித்தி என்று சித்தர்கள் சொல்லுவார்கள்.
 
இருந்திடும் தேகமெல்லாம் இறந்தபின் சிவமே ஆச்சு.
திருந்திட நந்தி திரும்பியும் பிறப்பாணப்பா 
பொருந்திடும் ஞானம் இன்றி போனவர் பிறப்பரேன்பார்
வருந்திடும் அறிவின்விதை மாயத்தை கானர் தானே 
இறந்தபின் உயிர்கள் சிவன் என்ற இயற்கை என்ற பிரபஞ்சத்தைச் சேரும். மீண்டும் பிரபஞ்சம் என்ற நந்தி உயிர்களை உருவாக்கும். இது அறிவால் அறிந்த வித்தை. இந்த உண்மை ஞானம் இல்லாதவர் செத்தவர்கள் மறுபிறவி எடுப்பார்கள் என்று சொல்லுவார்கள்.