1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கைரேகையை வைத்து நோய்களை அறியலாம் இது உண்மையா...?

கைரேகையை வைத்து செல்வம் தொழில் வாழ்க்கை, கல்வி ஆரோக்கியம் முதலியவற்றை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
ரேகைகளில் ஆரோக்கிய ரேகை, இருதயரேகை, மனரேகை ஆயுள்ரேகை முதலியவற்றை நன்கு ஆராய்ந்தால், ஒருவர்க்கு பிற்காலத்தில் எந்தவிதமான நோய் பாதிக்கும் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். 
 
மருத்துவரிடம் செல்வதற்கு முன்னால் நாமே இதை அறிந்துக்கொண்டால் தக்க சமயத்தில் மருந்துவ ஆலோசனை பெற்று நோயை நீக்கி  விடலாம் எனவும் கூறப்படுகிறது.
 
இருதய ரேகை: இருதயரேகை குரு மேட்டிலிருந்து தொடங்குகிறது. இந்த ரேகை புதன் மேட்டில் முடிவடைகிறது. இந்த ரேகை சமமாகவும்  சீராகவும், தீவுகளின்றி காணப்பட்டால் நல்ல ரத்த ஓட்டத்தையும் ஆரோக்கியமான இருதயத்தையும் உடையவராக திகழ்வர். இந்த ரேகை  உடைந்து காணப்பட்டால் அந்த கையுடைய நபருக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 
 
இந்த ரேகையில் தீவுகள் சிறியதாக ஆரம்பித்து முடியும் இடத்தில் பெரியதாகக் காணப்பட்டால் இருதய வால்வில் பிரச்சனை உள்ளது என்று நிச்சயமாக கூறலாம். இத்தகைய தீவுகளுடன் ஒரு கரும்புள்ளியும் இந்த ரேகையில் காணப்பட்டால் இருதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம்  குறைவாக இருக்கும். இருதய ரேகையில் சிறிய தீவுகள் காணப்பட்டால் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.
ஆரோக்கிய ரேகை: இந்த ரேகை புதன் மேட்டில் சுண்டு விரலுக்கடியிலிருந்து ஆரம்பித்து மனரேகையைக் கடந்து ஆயுள் ரேகையை நோக்கி  அமைந்துள்ளது. ஆரோக்கிய ரேகையில் தீவுகள் காணப்பட்டால், மூக்கு தொண்டை பகுதிகளில் குறைப்பாடுகள் தோன்றக்கூடும். சிறிய  துண்டுகளாக உடைந்து வரிசையாக காணப்பட்டால் வயிறு சம்பந்தமான கோளறைக் குறைக்கும்.
 
ஆயுள் ரேகை: ஆயுள் ரேகை சந்துரமேட்டில் முடிந்திருந்தால், பிறப்பு உறுப்புகள் பதிக்கப்படலாம். துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தால்  இருதய நோய் ஏற்படலாம். ஆயுள் ரேகையைச் சிறிய ரேகைகள் குறுக்கே வெட்டினால், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.