செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By

வாஸ்து முறைப்படி வாயு மூலையில் சமையலறை அமைக்கலாமா...?

கட்டப்படும் அனைத்து வீடுகளிலும் அக்னி பாகமான தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைப்பது என்பது ஒரு சில இடங்களில் நடைமுறை சாத்தியமாக இருப்பதில்லை. சில தனி வீடுகளில் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் ஈசானிய பாகத்தில்கூட சமையலறை அமைக்கப்பட்டிருப்பதை பலர் கவனித்திருக்கலாம்.
ஈசானிய பகுதி என்பது தண்ணீர் தத்துவத்தை குறிப்பதால் அங்கு சமையலறை அமைப்பதை சாஸ்திரம் ஏற்றுக்கொள்ளவில்லை. அக்னி தத்துவத்தை குறிக்கும் தென்கிழக்குதான் சமையலறைக்கான முதல் தேர்வாக வாஸ்து குறிப்பிடுகிறது. 
 
வீட்டின் வடமேற்கு பகுதியில் சமையலறை அமைக்கும்போது கிழக்கு நோக்கி நின்றுதான் சமைக்க வேண்டும். அதற்காக அறையின் தென்கிழக்கு மூலையில் அடுப்பை வைக்க வேண்டும். ‘வாஷ் பேசின்’ அல்லது ‘சிங்க்’ வடகிழக்கு மூலையில் வருவதுபோல  அமைத்துக்கொள்ளவேண்டும். ‘ஸ்டோரேஜ் ஷெல்ப்’ அல்லது அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு சுவரை ஒட்டியவாறு இருக்கவேண்டும். சிறிய அளவிலான ‘டைனிங் டேபிள்’ போடவேண்டியதாக இருந்தால் மேற்கு அல்லது தெற்கு திசைகள் பொருத்தமாக இருக்கும்.
வாஸ்து வீடுகளில் வடமேற்கு மூலை, தென்கிழக்கு அல்லது வடமேற்கு ஆகிய இரண்டு பகுதிகளை தவிர்த்து மற்ற அறைகளில் சமையலறை அமைந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு வாஸ்து நிபுணர்கள் ஒரு மாற்று வழியை காட்டியிருக்கின்றனர். அதாவது சமையல் எந்த அறையில்  செய்யப்பட்டாலும் அந்த அறையின் தென்கிழக்கு மூலையில் அடுப்பை வைத்துக்கொள்வதும், கிழக்கு நோக்கி நின்று சமையல் செய்வதும்  மிகவும் அவசியமானது என்று தற்காலிக மாற்று வழியை காட்டியுள்ளனர்.