வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சித்தர்களுக்கெல்லாம் தலைவரான அகத்தியர் பற்றிய அறிய தகவல்கள்...!!

கும்பமுனி, குருமுனி, தமிழ் முனி என்றெல்லாம் சிறப்பித்து அழைக்கப்படுபவர் நம் அகத்தியர் பெருமான். சித்தர்களுக்கெல்லாம் தலைவர் இவரே. முக்காலமும் அறிந்தவர். கடவுளர் அனைவரின் அருளை இருங்கே பெர்றவர் நம் அகத்தியர் பெருமான். அகத்தியர் வாழும் மலை  பொதிகை மலை ஆகும்
தென்னாட்டில் சிவசக்தி திருமணத்தை இறைவன் அருளால் கண்டவர். சித்த மருத்துவத்தின் தந்தை இவரே. இவருக்கு தெரியாத மருத்துவ  முறைகளே இல்லை.
 
அகத்தியர் மருத்துவம் மட்டுமல்லாமல் மணி, மந்திரம், சோதிடம், வானவியல், தமிழ், சமஸ்கிருதம், ரசவாதம் இவற்றிலெல்லாம் சிறந்து  விளங்கியவர்.
 
சிவபெருமானின் மகனான குமரக்கடவுளிடம் தமிழ் கற்றவர். தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர். காவிரியை அடக்கி கமலண்டத்தில் நிறுத்தியவர். ஆறுமுகக் கடவுளின் அன்பிற்கும் அருளிற்கும் பாத்திரமானவர்.
 
ஏழுகடல் நீரை குடித்து இந்திரனுக்கு போரில் உதவியர். விந்தியமலையை அடக்கியவர். வாதாபி, வல்லபன் ஆகிய அரக்கர்களை அழித்தவர். அகத்தியர் இயற்றிய ஜீவநாடி நூல் மிகவும் புகழ் பெற்றது.