நவக்கிரகங்களில் செவ்வாயின் ஆதிக்கம் நிரம்ப பெற்ற போகர்!!
Updated: வியாழன், 13 ஜூன் 2019 (13:13 IST)
பழனிமலையில் தவம் செய்யும் போது முருகப் பெருமான் அவருக்கு காட்சி கொடுத்து என்னை விக்ரமாக செய்து இந்த இடத்தில் பிரதிஸ்டை செய் என்று கூறி மறைந்தார். அதன் படி நவபாசானம் என்ற ஒன்பது வித மூலிகை கலவையால் முருகனின் மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். அதன் பின் பழனி மலையிலேயே வாழ்ந்த சித்தர் அங்கேயே ஜீவ சமாதி ஆனார்.
உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக தான் தரிசித்த தண்டாயுதபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர். அதில் உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம்.
இன்றும் பழனிமலையில் உள்ள கோவிலின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் சித்தர் போகரின் ஜீவசமாதி உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிரம்ப பெற்றவர் சித்தர் போகர், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் இவரை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கி நல்அருள் பெறுவர்.