வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

எந்த கிழமையில் விரதம் இருப்பதால் என்ன பலன்கள்...?

விரத தினத்தன்று சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து நீராடி தூய ஆடையினை அணிந்து அவரவர் வழக்கப்படி குங்குமம், திருநீறு, சந்தனம் அணியுங்கள்.

வழிபடப் போகிற தெய்வ உருவங்கள், படங்களை நன்றாகத் துடைத்து சந்தனம், குங்குமம் பொட்டுகள் இட்டு, மலர்களால் அலங்கரியுங்கள்.
 
அனைத்து பூஜைகளுக்குமே தூய்மையான நீரும், பூவும் அவசியம். முதல் நாளே தனியாக நீரெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லா நோன்புகளுக்குமே ஆரம்பமாக பிள்ளையாரை பூஜிக்க வேண்டும்.

ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறுவதுடன் நோய்கள் வராமல் தடுத்துக்  கொள்ளலாம்.
திங்கட்கிழமை விரதம் இருப்பதன் மூலம் குடும்பத்தில் பரஸ்பர அன்பும், அமைதியும் நிலவும்.
 
செவ்வாய்க் கிழமை விரதம் இருப்பதன் மூலம் குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும்.
 
புதன் கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் கல்வி, கேள்விகளில் தேர்ச்சி ஏற்படும்.
 
வியாழக் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கிய தடைகள் நீங்கி சத்புத்திர பாக்கியம் கிடைக்கும்.
 
வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் தம்பதியர்களுக்கு ஆயுள் தோஷங்கள் விலகப்பெறும்.
 
சனிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் வேலை தொழில் ஆகியவை விருத்தி பெற்று செல்வம் பெருகும்.