சிறுநீரகத்தில் உருவாகும் கல்லின் வகைகளும் அதன் அறிகுறிகளும்....!

Kidney Stones
Sasikala|
பொதுவாக பழச்சாறுகளை அதிகமாக பருகினால் உடலில் உப்புகள் சேருவதைத் தடுக்கலாம். அதிலம் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கும் பழங்களை சாப்பிட்டால் நல்லது. அதிலும் அந்த சிட்ரிக் ஆசிட் எலுமிச்சையிலேயே அதிகமாக உள்ளது.
அதிலும் இந்த எலுமிச்சையை சாறு பிழிந்து தண்ணீரில் கலந்து, தினமும் ஒரு வேளை பருக வேண்டும். இதனால் சிறுநீரகத்தில் உருவாகும் கல்லானது குறைகிறது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
சிறுநீரக கல்லின் வகை மற்றும் அறிகுறிகள்:
 
கால்சியம் வகை கற்கள் : அந்த கற்கள் சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் வெளியேறும் போது கற்கள் நகர்ந்து முதுகு வலி, சிறுநீரில் இரத்தம்,  காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
Kidney Stones 1
யூரிக் ஆசிட் வகை கற்கள் : இந்த பொருள் சிறுநீரில் இருக்கும் பொருள் தான். ஆனால் இது அளவுக்கு அதிகமாக சேரும் போது, அந்த பொருள் முழுவதுமாக வெளியேறாமல், உடலிலேயே தங்கிவிடும். இது அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவருக்கு ஏற்படும்.இதனால்  வயிற்றில் வலி ஏற்படும்.
 
மான் கொம்பு கற்கள் : இது மானின் கொம்பு போன்று இருக்கும். மேலும் உடலில் கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில்  உருவாகின்றன.
 
ஏற்கனவே கற்கள் இருந்து அதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தால், அதனை சாதாரணமாக விடாமல் உடனடியாக மருத்துவரை  அணுக வேண்டும். அதே சமயம் எலுமிச்சை சாற்றையும் தொடந்து பருக வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :