திங்கள், 20 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பைரவ தீபம் போடும் முறைகளும் அற்புத பலன்களும் !!

ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமான் சன்னதி முன் தேங்காய் சர்வ காரிய ஜெயதீபம். அதாவது தேங்காயில் மஞ்சளைத் தடவி இரண்டாக உடைத்து தேங்காய் நீரை கீழே ஊற்றி உள்ளே துடைத்து விட்டு அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு  தீபம் ஏற்றவும்.


பஞ்சபூத வசிய  தீபம்:   அதாவது 5 அகல் விளக்குகளில் முறையே இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஊற்றி திரிபோட்டு விளக்கேற்றலாம். 
 
அஷ்ட திக் பாலக வசிய  தீபம்:  அதாவது எட்டு அகல் விளக்குகளில் ஐந்து எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து  ஊற்றி திரி போட்டு தீபங்கள் ஏற்றலாம். 
 
நவக்கோள் வசிய  தீபம்:  அதாவது ஒன்பது அகல் விளக்குகளில் ஐந்து எண்ணெய்களையும் ஓன்றாக கலந்து தீபம் ஏற்றலாம். 
 
ராசி வசியதீபம் :  அதாவது 12 அகல் விளக்குகளில் ஐந்து எண்ணெய்களையும் கலந்து ஏற்றலாம். 
 
நட்சத்திர வசிய தீபம்:  அதாவது 27  அகல் விளக்குகளில் ஐந்து எண்ணெய்களையும் கலந்து ஏற்றலாம். 
 
மிளகு தீபம்:  சர்வ ருண/ரோஹ/தாரித்ரிய வித்வேஷன, சர்வ கஷ்ட/நஷ்ட/உபத்திரவ நிவர்த்தித, சர்வ சாப/பாப/தோஷ ஹர, சர்வ சத்ரு நாசன, சர்வ ஏவல் பில்லி சூனிய ஹர  தீபம்:   அதாவது 27 மிளகை சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் துணியில் ஏதாவது ஒன்றில் வைத்து சிறு மூட்டையாக கட்டி அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம். 
 
பூசணிக்காய் தீபம்:  அதாவது ஒரு பூசணிக்காயை வாங்கி இரண்டாக வெட்டி உள்ளே உள்ள விதைகளை நீக்கி இரண்டு பாதியிலும் உள்ளே குங்குமத்தை தடவி மூன்று இடத்தில் சந்தன குங்குமப் பொட்டு வைத்து நல்லெண்ணெய் நிரப்பி திரி போட்டு விளக்கேற்றலாம்.
 
வயதுக்கேற்ற சர்வ தோஷ ஹர தீபம்:   அதாவது உங்களுக்கு தற்போது என்ன வயது ஆகிறதோ அந்த வயத்துக்கேற்ற அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றலாம். 
 
மேலே சொன்ன முறைகளில் உங்களுக்கு எது வசதியோ அவ்வாறு தீபம் போட்டு வழிபட கஷ்டங்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்.