ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்ட கோமதி சக்கரம் !!

நேர்மறை ஆற்றலை தன்னிடமிருந்து எப்போதுமே வெளிப்படுத்தக் கூடிய தன்மை இந்த கோமதி சக்கரத்திற்கு உண்டு. அந்த நேர்மறை ஆற்றல் எப்போதுமே நம்மைச் சுற்றியும் இருக்கும்.

கோமதி சக்கரத்தை வைத்து வழிபாடு செய்து நம்முடைய வேண்டுதல்களை, மனதார வேண்டிக் கொண்டால் அந்த வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. 
 
வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் 5 கோமதி சக்கரங்களை வாங்கி, மஞ்சள் குங்கும பொட்டிட்டு, மஞ்சள் துணியில் வைத்து முடிந்து, நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் சுவாமி படத்திற்கு முன்பாக வைத்து தினமும் அதற்கு பூஜை செய்து வர வேண்டும்.
 
திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது வீட்டில் எந்த ஒரு சுப காரியங்களையும் நடத்த முடியவில்லை, என்ற பிரச்சனை இருந்தால் 3 கோமதி சக்கரத்தை வாங்கி மஞ்சள் நிறத் துணியில் வைத்து முடிந்து, பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து வந்தால் போதும். வீட்டில் சுபகாரியங்கள் கூடிய விரைவில் நடக்க தொடங்கும்.
 
9 கோமதி சக்கரங்களை வாங்கிய சிவப்புத் துணியில் வைத்து, மஞ்சள் குங்கும பொட்டு வைத்து பூஜை அறையில் வைத்து வீடு கட்ட வேண்டும் என்ற பிரார்த்தனையை தொடர்ந்து வைத்து வந்தால் கூடிய விரைவில் வீடு கட்டும் யோகம் வரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
 
எந்தத் துணியில் நீங்கள் முடிந்து வைத்தாலும் சரி, வாரத்தில் இரண்டு நாட்கள் அந்த முடிச்சை அவிழ்த்து உள்ளே இருக்கும் கோமதி சக்கரத்திற்கு பாலபிஷேகம் செய்து தண்ணீரில் நன்றாக கழுவி சந்தன குங்குமப் பொட்டு வைத்து அதன் உள்ளே வாசனை மிகுந்த பூக்களை போட்டு வைப்பது மேலும் நல்ல பலனைத் தரும்.