வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

திருமாலுக்கு இணையான சக்கரத்தாழ்வாரின் சிறப்புகள்...!

திருவாழி ஆழ்வான் என்று பல்வேறு நாமங்களால் போற்றப்படும் சுதர்சன சக்கரமே சக்கரத்தாழ்வாராகும். திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். 
திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர். அதர்மம்  தலையெடுக்கும் போது தர்மத்தை நிலைநாட்டுபவர் விஷ்ணு. இவரது கையிலுள்ள ஆயுதம் சக்கரத்தையே 'சக்கரத்தாழ்வார்' என வழிபடுகிறோம். 'ஆதிமூலமே'  என்று அலறிய யானை கஜேந்திரனை, கூகு என்னும் முதலையிடம் இருந்து காத்தது விஷ்ணுவின் சக்ராயுதமே.
 
அம்பரீஸன் என்ற பக்தனை காக்க துர்வாசரை விரட்டியதும், கிருஷ்ணரின் எதிரியான சிசுபாலனை கொன்றதும் இந்த சக்கரமே. இதற்கு சுதர்சன ஆழ்வார், சக்கர ராஜர், .ஹேதிராஜர் என்றும் பெயருண்டு. சனிக்கிழமையில் இவரை வழிபட்டால் மன சங்கடம் தீரும். எதிரி பயம் நீங்கும். தடை விலகும். வாகன பயணம்  இனிதாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.