திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

திருஷ்டி கழிக்க பின்பற்றப்படும் சில பரிகாரங்கள்...!

சிறப்பாக வியாபாரம் நடக்க மாதம் ஒருமுறையாவது திருஷ்டி கழிப்பதை வழக்கத்தில் கொண்டுள்ளனர். அதுவும் அமாவாசையன்று திருஷ்டி கழிப்பது என்பது பலரும் வழக்கத்தில்  கொண்டுள்ளனர். இப்படி ஒவ்வொரு அமாவாசையும் திருஷ்டி கழிப்பதால் வாணிபம் வளர்பிறையா வளரும் எனப்து நம்பிக்கை.
தேங்காய்: அமாவாசையன்று தேங்காய் உடைப்பவர்கள், அன்று காலையிலேயே தேங்காயை எடுத்து சாமி படம் அருகே வைத்து மஞ்சள் தூளை தண்ணியிலே கரைத்து கொள்ள வேண்டும்.  மனசார கடவுளை திருஷ்டி போக வேண்டிகிட்டு அதை உடைக்கிறவர்களிடம் தேங்காயையும் மஞ்சள் தண்ணீரையும் கொடுத்து, தேங்காயில் கற்பூரம் ஏற்றி சுற்றி வாசலில் உடைக்க  வேண்டும்..

உடைபடும் தேங்காய் மற்றவர்கள் எடுத்து உபயோகப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் ஈ எறும்பாவது சாப்பிட வேண்டும். தேங்காயை உடைச்சதும் மஞ்சள் தண்ணீரை  கொஞ்சம் தலை மற்றும் உடம்பில் தெளித்துக்கொண்டு சுத்தி போட்டவர், உள்ளே வந்ததும் தண்ணீர் குடிக்க கொடுக்கவும். இப்படி ஒவ்வொரு  அமாவாசையும் செய்வது நல்லது.
 
வெள்ளை பூசணிக்காய்: இதே முறையில் பூசணிக்காயை உடப்பதும் நல்லது. பூசணிக்காயை ஒரு இடத்தில் துளையிட்டு அந்த இடத்தில் மஞ்சள் குங்குமம் போட்டு சில சில்லறைகளையும்  போடுங்கள். பூசணிக்காயை உடைக்க போகும் நபர் வலதுகையில் கறுப்பு கயிறு ஒன்றை கட்டிவரச் சொல்லி பூசணிக்காயை உடைக்க வேண்டும். பூசணிக்காய்க்கு திருஷ்டிகள்  அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் உண்டு அதனை சுற்றுபவர் திருஷ்டிகளை அதனுள் ஈர்த்து போய் சிதறச் செய்கிறார். எனவே அவருக்கு தட்சணை கொடுங்கள். சுற்றும் நபர்  வெளி நபராக இருப்பின் முதலிலேயே தட்சணை கொடுத்துவிட வேண்டும். அவர் மஞ்சள் நீரை தெளித்து கொண்டு அப்படியே சென்று விட வேண்டும் உங்களுக்கு தெரிந்தவராக இருந்தால்  மஞ்சள் நீர் தெளித்துக் கொண்டு கால் கழுவிக் கொண்டு உள்ளே வரலாம்.
 
எலுமிச்சம் பழம்: அமாவாசையன்று திருஷ்டி கழிக்க விரும்புவோர் கடையை திறந்ததும் கடவுளை கும்பிட்டு ஒரு எலுமிச்சம் பழத்தினை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி  வருவோர் கண்பார்வை படும்படி வைக்கவும் கடை மூடும் சமயம் அதை எடுத்து தலையைச் சுற்றி அதை இடம் வலமாக மாற்றி எறியுங்கள். அல்லது கடையை மூடும் போது ஒரு  எலுமிச்சம் பழத்தில் கற்பூரம் வைத்து உங்களுக்கும் கடைக்கும் சேர்த்து சுற்றி அதை நசுக்கி இட வலமாக மாற்றி எறியுங்கள். எலுமிச்சம் பழம் தீய சக்திகளை திருஷ்டியின் பாதிப்புக்களை  நெருங்கவிடாமல் செய்யும். இவ்வாறு வீடுகளுக்கு செய்யலாம்.