வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஏன் அடிக்கடி திருஷ்டி கழிக்கவேண்டும் தெரியுமா...?

திருஷ்டி கழித்தல்: திருஷ்டி கழிப்பதால் அசதி, மறதி இருக்காது. உற்சாக எண்ணம் வரும். சிந்திக்கும் திறன் நன்றாக இருந்தால், நமது செயல் சிறக்கும்.

எண்ணெய் குளியல் உடல் குளிர்ச்சி அடைந்து பித்தத்தினால் வரும் நோய்கள் வராது. கண் திருஷ்டி தாக்காது. புருவ மத்தியில் பெண்கள் குங்குமும், ஆண்கள் திருச்சூரணம் (அ) திருநீர்  கட்டாயம் அணிய வேண்டும்.
 
வீட்டில் இருப்போர் அனைவரும் வாரந்தோறும் திருஷ்டி கழித்துக் கொள்ள வேண்டும். கடல் உப்பை குளிக்கும் நீரில் கலந்து குளியுங்கள் வாரம் தோறும். அசதி  நீங்கி புத்துணர்வு கிடைப்பதை உணரலாம்.
 
வீட்டிலும், கடையிலும் வாரம் தோறும் கடல் நீர் அல்லது கல்உப்பு நீர் கலந்து தரையை கழுவுங்கள். வாசலில் படிகாரம், கருடக்கிழங்கு கட்டுவது திருஷ்டியை  போக்கும். எலுமிச்சை பழத்தை தலையில் வைத்து மூன்று முறை சுற்றி அதை வெட்டி முச்சந்தியில் போடலாம்.
 
சித்தர் வழிபாடு: நமது ஆரா 5 அங்குலம் வரை பரவும். சித்தர்களின் ஆரா 50 அடியைத் தாண்டி பரவும். சித்தர்கள் அருகில் சென்றாலோ அல்லது அவர்களின் சமாதிகளுக்கு சென்றாலோ மனம்லோசாக உணர்வதும் உடல் நிலை சரியாவதும் அவர்களின் ஆரா நமது ஆராவை சரி செய்வதால் தான்.
 
சித்தர்களின் சமாதிகள் சக்தி மிக்க ஆராவை வெளியிட்டு நமது எண்ணங்களையும், உடல் நலத்தையும் சரி செய்து நம் உடலில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்றும் வல்லமை கொண்டது.