வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

தலைவாசல் படிக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் தெரியுமா....?

நாம் வசிக்கும் வீட்டிற்கு தலைவாசல் முக்கியமானது. வீட்டிற்குள் வருபவர்களை வரவேற்கவும் காலில் உள்ள தூசிகளை துடைத்து விட்டு வரவும் மிதியடிகளை போட்டிருப்போம். அந்த மிதியடி சிவப்பு நிறமானதாக இருந்தால் அது சிறப்பானது. காரணம் சிவப்பு பாசிட்டிவ் எனர்ஜியை  அதிகரிக்குமாம்.
ஒரு வீட்டிற்கு தலை வாசல் மிக முக்கியமாகும். எவ்வளதான் பெரிய வீட்டை கட்டினாலும் வீட்டிற்கு வாசல் முறையாக அமையவில்லை என்றால் அவ்வீட்டில் லட்சுமி குடியிறுக்கமாட்டாள். லட்சுமி தேவி வீட்டில் புகுந்தால் தான் வீடு சுபிட்சமடையும். சகல சம்பத்துக்களும்  கிடைக்கும். 
 
நன்மையாகட்டும், தீமையாகட்டும், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி யாகட்டும் எதுவுமே வாசலை கடந்துதான் நம்மை நோக்கி வருகின்றன. நல்லனவற்றை உள்ளே அனுப்பி தீயனவற்றை வெளியே அனுப்பும் பொறுப்பு வீட்டின் தலை வாசலுக்கு மட்டுமே உண்டு.
 
வீட்டு நிலைப்படிக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து அழகுபடுத்துகிறோம். மாவிலை தோரணம் கட்டுகிறோம். நிலைப்படிகளில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. 
 
புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யும் போது, நிலைப்படிக்கு பூஜை செய்வதை பார்த்திருக்கலாம். இது அழகு செய்வதோடு மட்டுமல்லாமல் ஒரு தெய்வ வழிபாடும் உள்ளது.