Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் செல்வம் பெருக எந்த விஷயங்களை நீக்க வேண்டும் தெரியுமா...?

Written By Sasikala
Updated: திங்கள், 29 மார்ச் 2021 (16:02 IST)

வீட்டில் சிலந்தி கூடு எனும் ஒட்டடை இருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். ஒட்டடை இருந்தால் வீட்டில் எதிர் மறை சக்திகள் வலுப்பெறும்,மனதில்  துர் சிந்தனை குடி கொள்ளும்.
 
வீட்டில் உடைந்த கண்ணாடி வைத்திருக்க கூடாது. மட்டுமல்லாது பரிசு பொருளாக இருந்தாலும் கூட , கண்ணாடியில் உள்ள எந்த பொருளாக இருந்தாலும் அகற்ற  வேண்டும். இல்லாவிடில் துரதிஷ்ட்டமான வாஸ்து அமையும்,பிரச்சினைகள் வரும்.
 
தண்ணீர் குழாயில் தண்ணீர் சொட்டு சொட்டாக வடிந்து கொண்டிருந்தால் அதனை சரி செய்ய வேண்டும். அப்படி வடிந்து கொண்டேயிருந்தால் நீர் வீணாவது போல பணம் விரயமாகும். நீரை சிக்கனமாக பயன்படுத்துபவர்களுக்கு பணம் தாராளமாக இருந்து வரும்.
 
வீடுகளிலோ அதன் அருகிலோ தேன் கூடு இருக்க கூடாது. தேன் கூடு வீட்டில் இருந்தால் வறுமை வளரும். கடன் தொல்லைகள் ஏற்படும்.
 
மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை   முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.
 
வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை  நீங்கி  செல்வம் கொழிக்கும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments