நவம்பர் 1 முதல் கல்லூரிகள் திறப்பு: சனிக்கிழமைகளிலும் கல்லூரிகள் இயங்குமா?

college
நவம்பர் 1 முதல் கல்லூரிகள் திறப்பு: சனிக்கிழமைகளிலும் கல்லூரிகள் இயங்குமா?
siva| Last Updated: வியாழன், 24 செப்டம்பர் 2020 (08:39 IST)
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. ஆந்திரா உள்பட 7 மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் நவம்பர் 1 முதல் நாடு முழுவதும் கல்லூரியில் திறக்கப்படும் என்றும், முதல் கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்றும் மத்திய கல்வி துறை தெரிவித்திருந்தது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நவம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் ஒவ்வொரு சனிக்கிழமையும் கல்லூரிகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதமே கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், கொரோனாவால் மூன்று மாதங்களுக்கும் மேலாக கல்லூரிகள் செயல்படாததால் அதனை ஈடுகட்டும் வகையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு சற்று பேரதிர்ச்சியாக உள்ளது
மேலும் இந்த ஆண்டு மட்டும் கல்லூரிகளில் பாடங்கள் குறைக்கப்படுவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும், கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு முன்னரே இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றும் மத்திய கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :