1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

உமிழ்நீர் பற்றி சித்தர்கள் கூறுவன என்ன தெரியுமா...?

சித்தர்கள் உமிழ்நீரை "காயப்பால்" என்று சொல்வார்கள். எச்சில் வேறு  உமிழ்நீர் வேறு. எச்சிலானது நாறும். உமிழ்நீர் நாற்றமடிக்காது. இது எப்பொழுதாவது நமக்கு வாயில் ஊறும். டாக்டர் ஊசி போடுவதற்கு முன் பீய்ச்சி அடிப்பாரே, அது போல சுரந்து  அடிக்கும்.

வெட்டவெளியாகிய சிரசில் ஊறுவது, தன்னை உண்பவரின் பசியை போக்குவது. ஆட்டுப்பால், மாட்டுப்பால் போல காயப்பால் நாற்றமடிக்காது, என்று சித்தர்கள்  சொல்லி இருக்கிறார்கள்.
 
தேவலோகத்திலும் இதைப்போல் பாலில்லை. இது நம்மை இறவாமல் காக்கும் அமிர்தமாகும். யோகிகள் இதை நாள்தோறும் உண்டிருப்பர். சாதாரணமாக இது  தொண்டை வழியாக உள்ளே சென்று அக்னியில் விழுந்து போகும். அவ்வாறு விடாமல் நாக்கை மடித்து வாயால் நன்கு சுவைத்து நெடுநேரம் இருத்தி  உண்ணவேண்டும். அப்படி உண்பவர்களுக்கு காயசித்தி ஏற்படும். உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும். நீண்டநாள் வாழலாம்.
 
தாவரங்கள் இந்த ஸ்டார்ச் மூலமாகத்தான் தேவையான உணவை தயாரித்துக் கொள்கின்றன. அதற்க்குச் சூரிய ஒளியும் நீரும் இருந்தால் போதும். சித்தர்களும்  இந்த வழிமுறையையே பின்பற்றி இருக்கிறார்கள்.
 
உமிழ்நீரில் இருந்து ஸ்டார்ச்சை பெற்ற உடல் அதன் உதவியோடு சூரிய ஒளியில் இருந்து உடலுக்குத் தேவையான சக்தியை தயாரித்துக் கொள்ளும். ப்ராணாயாமம் செய்தால் காயப்பால் அதிகம் சுரக்கும்.
 
எப்பொழுதும் துப்பிக் கொண்டே இருப்பவர்களுக்கு எப்பொழுதாவது சுரக்கும் இந்த உமிழ்நீரின் சக்தி கிடைக்காமலே போய்விடுகிறது. சித்தர்கள் உணவை நன்றாக மென்று அரைத்து நீர்போலாக்கி சாப்பிடச் சொன்னார்கள். அப்படிச் சாப்பிடும்போது உமிழ்நீர் சுரந்து உணவுடன் கலந்து நமக்கு பலம் கிடைக்கும்.