திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 4 மே 2022 (12:03 IST)

தோல் நோய்கள் வராமல் இருக்க எந்த வழிபாட்டை செய்யலாம் தெரியுமா...?

Devi Durga
வெயிலிலிருந்து காத்துக்கொள்ள அக்னி பகவானை வழிபடலாம்.. தான, தர்மங்கள் செய்யலாம். முக்கியமாக கோயிகளுக்கு செல்வதும் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடத்துவதும் நல்லது. அதனால் மிக நல்ல பலன்கள் கிடைக்கும்.


பரணி நட்சத்திரத்திற்கு உரிய தேவதையான துர்க்கையையும், கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய அக்னி தேவன், ரோகிணி நட்சத்திரத்திற்கு உரிய பிரம்மாவையும் வழிபடலாம். முருகன், சிவன் அக்னியின் அம்சம். மேலும் சீதளா தேவியை வணங்குவதால் அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படும்.

அக்னி நட்சத்திர காலத்தில் தான - தர்மங்களை செய்யலாம். அத்துடன் இந்த காலத்தில் தண்ணீர் பந்தல் அமைத்தல், மோர் பந்தல் அமைத்தல் முதலியன செய்தால் இறைவனின் அருள் பெறலாம். இந்த காலத்தை கத்திரி வெயில் காலம் என்றும் அழைப்பார்கள்.

அப்படிப்பட்ட இந்த வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். அதனால் இந்த காலத்தில் ஏழைகளுக்கும், மாற்று திறனாளிகளுக்கும், முடியாதவர்களுக்கும் குடைகள், காலணிகளை வழங்குதல் நல்லது. அத்துடன் அன்னதானமும் செய்தல் சிறந்தது.

ஒருவர் மன நிறைவு அடைவது நீர் அருந்திய பின்னரும், உணவருந்திய பின்னரும் தான். அதனை செய்வதால் இறை அருள் முழுவதுமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனால் நமக்கு தோல் நோய்கள் வராமல் இருக்கும் என்பது ஐதீகம்.