1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அட்சய திருதியை தினத்தன்று நிகழ்ந்ததாக கூறப்படுபவை என்ன தெரியுமா...?

அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது. அட்சய திருதியை தினத்தன்று தான் கங்கை அன்னை வான் உலகத்தில் இருந்து பூமியை வந்தடைந்தார்  என புராணங்கள் கூறுகின்றன.
 
அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை' என்று பெயர். சதம் என்றால்  அடிப்பட்டு ஊனமாகாதது என்றும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை' எனும் பெயர்  அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.
 
அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தார். சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய  திருதியை தினத்தன்றுதான். பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று  புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.
 
அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன. அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை  பெற்றார். 
 
மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும். மகாலட்சுமி திருமாள்  மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.
 
அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார். அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார். பாண்டவர்கள் தங்களின் வனவாச காலத்தில் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். அட்சய திருதியை நாளில் தான்  மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றார்.
 
இப்படி சிவனுக்கும், மஹாவிஷ்ணுவுக்கும் மகாலட்சுமிக்கும் உகந்த இந்த நன்நாள் முதல் உங்கள் இல்லங்களில் தாமரை மணி மாலை, கோமதி சக்கம், வலம்புரி சங்கு, குபேர எந்திரம், சாலகிராம கல், கருங்காலி கட்டை, ருத்ராட்ச மாலை போன்றவற்றை வாங்கி வைத்து பூஜை செய்வது சிறப்பானதாகும்.