வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பஞ்சபூத சக்திகளை வழிபட உகந்த நாள் எது தெரியுமா...?

பஞ்சபூதங்கள் என்று அழைக்கப்படுவது நீர், நிலம், காற்று, வானம் மற்றும் நெருப்பு. நாம் செய்யும் ஒவ்வொரு தொழிலும் மற்றும் செயலும் பஞ்சபூதங்களை சார்ந்ததாகவே இருக்கும்.


உலகம் இயங்குவதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது பஞ்ச பூதங்களால் தான் என புராணங்களில் சொல்லப்படுகிறது. 
 
மந்திரம்: “பஞ்சபூதத்திக தேவகா”
 
இந்த மந்திரத்தை 16 முறை பிரம்மமுகூர்த்தத்தில் ஒலிக்கும்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பஞ்சபூத தோஷங்கள் அனைத்தும் விலகும். பஞ்சபூதங்களை நம்பி  தொழில் புரிபவர்கள், பஞ்சபூதங்களால் ஆபத்துக்கள் ஏற்படுபவர்கள், பஞ்சபூதத் தோஷங்கள் இருப்பவர்கள் இந்த மந்திரத்தை அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு ஜெபிக்க வேண்டும். இதனால் பஞ்சபூதங்களால் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும்.
 
பஞ்சபூத சக்திகளை கொண்ட ஐந்து மூர்த்திகளான பிரம்மன், உருத்திரன், மகேஸ்வரன், சதா சிவன் மற்றும் விஷ்ணு. பஞ்ச சக்திகளான பராசக்தி, ஆதிசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி மற்றும் ஞான சக்திகளாகும். இவைகளை மந்திரங்களுடன் நாம் ஜெபித்தால் நமக்கு பஞ்சபூதங்களின் சக்தி கிடைக்கும். 
 
மனிதனுக்கும் பஞ்ச பூதங்கள், அதன் ஐந்து குணங்கள், ஐந்து புலன்கள், ஐந்து மனித மேம்பாடுகள் ஆகியவற்றுக்கு இடையே இயல்பாகவே தொடர்பு உள்ளது. அமாவாசை முடிந்த 5-ம் நாள் மற்றும் பெளவுர்ணமி முடிந்த 5-ம் நாள் வருவது மகா சக்தியான பஞ்சமி திதி. இந்நாளில் நாம் ஐந்து முகங்கள் கொண்ட குத்து  விளக்கிள் ஐந்து எண்ணெய்களை கலந்து விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும்.
 
பஞ்சபூத வழிபாடுகளில் பஞ்ச பூதங்கள் இருக்கும் தலங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்வது நல்லது.