சனி ஜெயந்தி நாளில் வழிபாட்டு பலன்கள் !!
அமாவாசை திதி நாளில், சனி ஹோரையில் சனி பகவானை நினைத்து பூஜை செய்து வழிபடலாம். நம்மால் முடிந்த அளவிற்கு தானம் தர பாதிப்புகள் நீங்கும்.
சனியால் ஏற்பட்டுள்ள சங்கடங்கள், கஷ்டங்கள் நீங்க சனிபகவானை சனி ஜெயந்தி நாளில் வழிபடுங்கள் பிரச்சினைகள் நீங்கும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனீஸ்வரர்தான். இவர் நியாயவான், தர்மவான், நீதிமான் என போற்றப்படுகிறார். ஆயுள், ஆரோக்கியம், செல்வம், தொழில் ஆகியவற்றை அருள்பவர் சனீஸ்வர பகவான்தான்.
சாதாரண தொழிலாளியைகூட மிகப் பெரிய தொழிலதிபராக ஆக்கும் சக்தி சனீஸ்வரருக்கு உண்டு. சர்வ அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், கர்ம வினைப்படி அவர்களை துன்பத்திற்கு ஆளாக்கக்கூடியவரும் இவர்தான்.
வைகாசி மாதம் அமாவாசை வரும் நாளினை சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சனி பகவானை வணங்குவதோடு ஏழை, எளியவர்களுக்கு இயன்ற அளவு தானங்கள் செய்து நன்மைகள் பெறலாம்.
ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் பெற சனி பகவானை இந்த நாளில் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
சனி ஜெயந்தி நாளில் சனி ஹோரையில் சனி பகவானை நினைத்து பூஜை செய்து வழிபடலாம். நம்மால் முடிந்த அளவிற்கு தானம் தர பாதிப்புகள் நீங்கும்.