வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

புனித நீர்நிலைகளில் எவ்வாறு நீராடவேண்டும் தெரியுமா...?

இந்து சமயத்தில் புனித நீர்நிலைகளில் நீராடுவது என்பது வகுக்கப்பட்ட நியதி. தர்ப்பணம் கொடுக்கும்போது, ஆன்மீக பயணத்தின்போது, தோஷம் கழிக்கும்போது என கோவில் குளங்கள், கடல், கிணறு என நீராட என சில விதிமுறைகள் நம் முன்னோரால் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படிதான் நீராடவேண்டும்.

கடலிலோ, புண்ணிய நதிகளிலோ புனித நீராடும்போது, ஒரே ஆடையை மட்டும் உடுத்தி நீராடக்கூடாது. இடுப்பில் உடுத்தியிருக்கும் ஆடையின்மீது மற்றொரு ஆடையை சுற்றி கட்டிக்கொள்ள வேண்டும். அதேப்போல், உடைகளின்றியும் நீராடுதல் கூடாது.
 
நதியில்  மூழ்குவதற்கு முன் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி, இடுப்பு வரை தண்ணீரில் நனையும்படி நிற்கவேண்டும். மூன்றுமுறை சிறிதளவு தீர்த்தத்தை, உள்ளங்கையில் எடுத்து, மஹா விஷ்ணுவின் நாமங்களை சொல்லி குடிக்க வேண்டும். பின், தலையில் சிறிதளவு தெளித்து கொள்ள வேண்டும். முதல்முறை மூழ்கும்போது, கண்கள், காதுகள், மூக்குத்துளைகளை கைகளால் மூடிக்கொண்டு மூழ்கவேண்டும். 
 
ஈர ஆடையுடன் மூழ்கக்கூடாது. இரவில், நதிகளின் குளிக்கக்கூடாது. சிவராத்திரி, சந்திர கிரகணம் ஆகிய நாட்களில் மட்டும், இரவு நீராடலாம்.
 
நீராடும்போது சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சிகைக்காய் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது. நதிகளில் எச்சில் துப்பக்கூடாது. நீராடும்போது நீருக்குள்ளேயே சிறுநீர்  கழித்தலும் கூடாது. செருப்புக்காலோடு நதிகளில் இறங்கக்கூடாது.