திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (11:13 IST)

விநாயகர் முன் தோப்புக்கரணம் போடும் வழக்கம் எப்படி வந்தது தெரியுமா...?

Thoppukaranam
ஒருமுறை பிரம்மனால் தொழுநோய் பெற் ற நவகிரகங்கள், கணபதியை பூஜித்து குணம் பெற்றார்கள். மனிதர்கள் மட்டுமன்றி சகல தேவர்களுக்கும் அருளியவர் கணபதிப் பெருமான்.


விநாயகர் வடிவத்துக்குள் பிரபஞ்சமே வியாபித்து நிற்பதைக் காட்டும்விதமாக, அரிசி மாவுக்குள் தேங்காயும் வெல்லமும் கலந்த இனிப்பான பூரணத்தை வைத்து, முதன்முதலில் விநாயகருக்குப் படைத்து அவரின் அருளை பெற்றார் ரிஷிபத்தினி அருந்ததி.

அனலாசுரனை விழுங்கியதால், கணபதிக்கு ஏற்பட்ட வயிற்றுத் தீயின் உஷ்ணத்தைக் குறைப்பதற்காக சப்த ரிஷிகளால் விநாயகருக்கு அறுகம்புல் சமர்ப்பிக்கப்பட்டது. அதையே நாம் இன்றும் கடைப் பிடிக்கிறோம்.

தன்னை மதிக்காமல் சென்ற பிரம்மதேவரின் கர்வத்தை அடக்க நினைத்த விநாயகர் அவருக்குத் தன் சுயரூபத்தைக் காட்டி அனுக்கிரகம் செய்தார். தன் கர்வம் அடங்கிய பிரம்மதேவர், நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டு வணங்கினார். அதுவே இன்றும் தொடர்கிறது.

தோப்புக்கரணம் போடுவதென்பது சிறந்த யோகப் பயிற்சி. ஒருமுறை விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தை விழுங்கிவிட்டார் விநாயகர். விநாயகரை சிரிக்க வைத்தால் தான் சுதர்சன சக்கரத்தைத் திரும்பப் பெற முடியும். எனவே, விஷ்ணு தோப்புக்கரணம் போட்டு விநாயகரைச் சிரிக்கவைத்து தன்னுடைய சுதர்சன சக்கரத்தைத் திரும்ப பெற்றார்.

பிறப்பிலேயே சகல ஞானங்களையும் பெற்ற கணபதிக்குக் குரு என்று எவருமே இல்லை. அவரே ஞான உருவானவர். அதனால்தான்  கல்வியில் சிறந்து விளங்கவும், தேர்வில் வெற்றி பெறவும் எல்லாக் குழந்தைகளுக்கும் கணபதி அருளுகிறார்.