ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

மாசி மாத பௌர்ணமி நாளில் வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்...!

மகம் நட்சத்திரத்திற்கு அதிபதி நவகிரகங்களில் நிழற்கிரகங்களில் ஒன்றான கேது பகவான் ஆவார். இவர் ஞானத்தையும், மோட்சத்தையும்  அதிகம் அருள்பவர். 
கேது பகவான், ஞானத்தை அளிப்பதுடன் மிகப் பெரும் செல்வத்தை அள்ளித் தரும் வல்லமை உள்ளவர். இப்படி பல புண்ணிய அம்சங்களை கொண்ட மாசி மாதத்தில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் சந்திரன் வரும் தினம் தான் மாசி பௌர்ணமி. இப்படி பூரண சந்திரன்  அமையும் நாளே மாசி மாத பவுர்ணமி. 
 
மாசி மக பௌர்ணமி அன்று கோவில்களில் சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய மூவருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், யாகங்கள்,  உற்சவங்கள் நடைபெறுகின்றன. அன்றைய தினத்தில் மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமி தினங்களில் விரதம் மேற்கொள்வதை போன்றே  மாசி மாத பௌர்ணமி தினத்தன்று இருக்கும் விரதம் நமக்கு சிறப்பான பலன் தரும். 
 
மாசி மாத பவுர்ணமியன்று சத்யநாராயண பூஜை செய்வதும் மற்றும் மாலை நேரத்தில் சூர்ய அஸ்தமனத்திற்கு பின்னர் அம்மன் கோயில்களில் வழிபாடு செய்வதும் அதிக நன்மைகள் தரும். மாசி மாத பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் சமயம்  வண்டுகள் மொத்தமாக பறக்கும் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு ஏற்படுமானால் உங்களின் பல மனிதப்பிறவிகளின் கர்மங்கள் அந்த நொடி பொழுதே தொலைந்ததாக ஐதீகம். 
 
இப்பிறவிக்கு பிறகு இனி பிறவா நிலை உங்களுக்கு கிடைக்கும். மேலும் அனைத்து துறைகளிலும் ஈடுபட்டுள்ளவர்கள் மாசி பௌர்ணமி கிரிவல வழிபாட்டால் அதிகப் பலன்களை பெறுவார்கள். கணவனை பிரிந்து வாழ்பவர்கள், கணவரின் அன்பை பெற்று இணைபிரியாமல்  வாழும் அமைப்பு உண்டாகும். அதிகளவு கடன் வாங்கி அதை திருப்பிப் செலுத்த முடியாமல் திணறுபவர்கள் மாசி பௌர்ணமி கிரிவலம்  சென்று சிவனை வழிபடுவதன் மூலம் விரைவில் தீரும்.