திங்கள், 6 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (14:50 IST)

வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!

வெள்ளிக்கிழமை விரதம் அம்பிகை, முருகன் ஆகியோருக்கு உரியது. இந்த விரதத்தை மேற்கொண்டால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைக்கும். சுகபோக வாழ்வு உண்டாகும். வாகனயோகம் அமையும்.


வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி பூஜைகள் செய்து இறைவனை வழிபட்டால் நன்மை உண்டாகும். அத்துடன், இந்த நாட்களில் ஆலயங்களிலும் சிறப்பான பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாகும்.

15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

வெள்ளியில் மாரியம்மன் முதலான அம்மனைத் தரிசனம் செய்து வேண்டினால் நன்மை உண்டாகும். மங்காத செல்வங்கள் தந்து காத்தருள்வாள் தேவி என்பது ஐதீகம்! குறிப்பாக, ராகுகால வேளையில் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால் காரியத்தடைகள் எல்லாம் நீங்கும்.