புதன், 13 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

குபேரனுக்கு நாணயங்களை கொண்டு அர்ச்சனை வழிபாட்டு பலன்கள்...!!

மஹாலக்ஷ்மிக்கு வெள்ளிக்கிழமை உகந்த நாளாக இருக்கிறது போல குபேரருக்கு வியாழன் கிழமை உகந்த நாளாக இருக்கிறது.


ஒவ்வொரு வியாழன் அன்றும்  மாலை வேளையில் தவறாமல் துளசி அர்ச்சனையும், 108 நாணய அர்ச்சனையும் செய்ய வேண்டும். 
 
குபேரருக்கு நாணயங்களை கொண்டு அர்ச்சனை செய்தால் மட்டும் போதாது. துளசி அர்ச்சனையும் செய்ய வேண்டும். எப்போதும் குபேரன் சிலையை சுற்றி  நாணயங்கள் இருக்க வேண்டும்.
 
குபேரனுக்கு நாணய அர்ச்சனை செய்யும் போது 108 குபேரர் போற்றி கூறுவார்கள். முடிந்ததும் துளசியால் அர்ச்சனை செய்து நிவேதனமாக கற்கண்டும், நெல்லிக்கனியும் அவசியம் வைக்க வேண்டும். 
 
வியாழன் மாலையில் இந்த பூஜையை முடித்து தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை காலையில் மஹாலக்ஷ்மி பூஜை செய்யும் போது இருவரின் அருளும் ஒரு சேர  கிடைக்கும். ஏனெனில் வியாழன் மாலை தொடங்கும் குபேர காலம் மறுநாள் வெள்ளியில் காலை வரை நீடிக்கிறது. இந்த குபேர காலத்தில் செய்யபடும் பூஜைகள்  அதிக பலன் தருபவை. 
 
இந்த இரு கடவுளரும் செல்வதிற்கு அதிபதியாக விளங்கக்கூடியவர்கள். இவர்களை சுற்றி எப்போதும் நறுமணம் வீசுமாறு பார்த்து கொள்வது மிக பெரிய பலன்களை  தரும். 
 
பச்சை கற்பூரம், துளசி சேர்த்த தீர்த்தம் வைக்கலாம். ஏலக்காய் மாலை சாற்றி வழிபடலாம். பூஜைக்கு உகந்த எண்ணெய்யாக நல்லெண்ணெய் மற்றும் நெய்  மட்டுமே பயன்படுத்த வேண்டும். வியாழன் அன்று காலையில் பூஜை பொருட்களை விலக்கி வைப்பது நல்லது.

இது போல தொடர்ந்து செய்து வந்தாலே போதும்.  உங்கள் வீட்டில் எப்படிபட்ட தீய சக்திகள் இருந்தாலும் விலகி ஓடி விடும். தடையற்ற பணவரவு தாராளமாக வந்து கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகம்  இல்லை.