1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பஞ்சமி திதி அன்று வராகி அம்மனை வணங்குவது ஏன்...?

வாராஹி தேவி இயல்பாகவே உக்கிரமானவள் என்பதால், இந்த அம்மனை வணங்குவதற்கு அனைவருக்குமே மனதில் பயம் இருக்கும். வீட்டில் வாராகி திருவுருவப்  படத்தை வைத்து வணங்குவதற்கு அஞ்சுவார்கள். 

நாம் எல்லோரும் நினைக்கும் அளவிற்கு வாராஹி தேவி கோப குணத்தை கொண்டவள் இல்லை. குழந்தை மனம் கொண்ட வாராஹி தேவியை தன்னலம் பாராமல், கெட்ட எண்ணங்களை மனதில் வைத்துக்கொள்ளாமல் வணங்கினால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யும் தெய்வம் தான் இந்த வாராஹி  அம்மன்.
 
பொதுவாகவே கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி இந்த 4 நட்சத்திரங்களை கொண்டவர்கள் வாராஹி அம்மனை மனதார வழிபட்டாலே போதும். அவர்களுக்கு உடனடியாக பலன் கிடைத்துவிடும். இந்த நட்சத்திரம் இல்லாதவர்கள், இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் வாராஹி அம்மனை வழிபடுவது சிறந்தது. 
 
நமக்கு இருக்கும் தீராத கஷ்டமாக இருந்தாலும், தீராத நோயாக இருந்தாலும், தீராத மன கஷ்டம், பணக்கஷ்டம், எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் வாராஹி அம்மனை நினைத்து, தலைவாழை இலை விரித்து, அதில் பச்சரிசியை கொட்டி பரப்பி, அதன் மேல் ஒரு தேங்காயை உடைத்து இரண்டுமுடிகளாக வைத்து, அதில்  இலுப்ப எண்ணெய் ஊற்றி, சிவப்பு திரி போட்டு, தீபம் ஏற்றினால் போதும்.

இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டின் அருகில் வாராஹி அம்மன் கோவில் இருந்தால் அங்கு செய்யலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிறிய வாராகி அம்மன் திருவுருவப் படத்தை வைத்து அதன்முன் செய்து வரலாம்.
 
வாராஹி அம்மனுக்கு சிவப்பு மலர் மிகவும் விருப்பமானது அதிலும் சிவப்பு தாமரை மிகவும் பிடிக்கும். பஞ்சமி திதி அன்று வராகியை மனதார நினைத்து வழிபடுவது நல்ல பலனைத்தரும்.
 
வராகி அம்மனுக்கு பூண்டு கலந்து தோல் நீக்கப்படாத உளுந்து வடை, நவதானிய அடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணை நீக்காத தயிர்சாதம், நவதானிய அடை  தோசை இவைகள் அனைத்தும் மிகவும் பிடிக்கும்.