வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

மார்கழி மாதத்தில் திருவெம்பாவை படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !!

மார்கழி மாதத்தில் கோவிலுக்கு செல்பவர்கள் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடினால், அளவற்ற புண்ணியத்தையும், தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் திருமண யோகமும் கைகூடிவரும். 

மார்கழி மாதத்தில் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாயு சக்தியான தூய்மையான காற்று பூமியெங்கம் பரவி இருக்கும். அந்த தூய்மையான காற்றை சுவாதித்தால் ரத்த ஓட்டம் சீராகி உடம்பில் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பது அறிவியல் ரீதியான உண்மையாகும். மற்ற நாட்களில் கோவிலுக்கு சென்று  வழிபடுவது செய்தால் தான் உரிய பலனும் புண்ணியமும் கிடைக்கும். 
 
மார்கழி மாதத்தில் வெறுமனே கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்து வந்தாலே புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்கு காரணம் இந்த மாதத்தில் தான் வைணவர்களுக்கு பிரியமான வைகுண்ட ஏகாதசி திருநாளும், சைவ சமயத்தை சேர்ந்தவர்களுக்கு பிடித்தமான ஆருத்ரா தரிசன திருநாளும்  வருவதால் தான். 
 
மார்கழி மாதத்தில் விரதம் இருப்பவர்கள், அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு, கோவிலுக்கு சென்று திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்களை பாடி சுவாமி தரிசனம் செய்து வருவார்கள். இதில் திருப்பாவை பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அருளித் தந்தது. திருவெம்பாவை சைவ  சமயக்குறவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் அருளியது.
 
திருவெம்பாவை பாடலை மாணிக்கவாசகர் பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் அருளியதாகும். அதேபோல், திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்  திருப்பெருந்துறையில் அருளியது.
 
கன்னிப் பெண்கள் தோழியரை தூக்கத்தில் இருந்து எழுப்பி, அனைவரும் ஒன்று சேர்ந்து நீர்நிலைகளுக்கு சென்று கூட்டமாக குளித்துவிட்டு தாங்கள் வழிபடும் தெய்வத்திடம், தங்களின் வாழ்வு வளமோடு இருக்கவேண்டும் என்றும், தங்களுக்கு கண் நிறைந்த கணவன் வேண்டும் என்றும் வேண்டிக்கொள்வதாக அமைந்த  பாடல்கள் இவை.

திருவெம்பாவை பாடல்கள் இருபதும், திருவண்ணாமலையில் இருந்தபோது, அங்கிருந்த கன்னிப்பெண்களும் சிறுமிகளும் பாவை நோன்பு  இருப்பதைக் கண்டு, தன்னையும் ஒரு கன்னிப்பெண்ணாக கற்பனை செய்துகொண்டு பாடிய பதிகங்களாகும்.