1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 21 ஜனவரி 2022 (11:48 IST)

சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!

சங்கடங்கள் அனைத்தும் தீர்த்து வைப்பார் விநாயகப் பெருமான். கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுப்பார். நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துத் தருவார்.


இழந்த உத்தியோகத்தையும் பதவியையும் கெளரவத்தையும் பெற்றுத் தருவார் விநாயகர். நம் சங்கடங்களை தீர்ப்பதால்தானே சங்கடஹரசதுர்த்தி என்கிறோம். நல்லெண்ணெய் காப்பு போடுவதால் நமது துன்பங்கள் தீரும். இளநீர் அபிஷேகம் நம் மனதை அமைதிப்படுத்தும்.

அபிஷேகம் செய்து பூர்ண அலங்காரம் செய்து அருகம்புல் மாலை வெள்ளெருக்கு மாலை அணிவித்து ஆராதனை செய்ய பலன் இரட்டிப்பாகும். தனியாகவோ மற்றவர்களுடன் இணைந்து கூட்டாகவும் செய்யலாம். எந்தகோவிலிலும் தெருவில் உள்ள பிள்ளையார் ஆலயங்களிலும் சதுர்த்தி அபிஷேகம் செய்யலாம்.  

குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது ஒருவர் நேரிடையாக அபிஷேக பொருள், நேரிடையாக சிரம் மேற்கொண்டு வாங்குவது பூஜையில் கலந்து கொள்வது அளவில்லாத பலனை அள்ளி தருபவர் விநாயகர்.
கேது தோஷம் உள்ளவர்கள் கேதுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அசுவினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தங்களுக்கு வந்திருக்கும் சங்கடங்கள் தீர இந்த சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருக்கலாம்.

இன்றைய சுக்ர வார விரதமிருந்து விநாயகர் கோவிலில் மாலை நேர அபிஷேக ஆராதனைகள் பார்ப்பது சுக்ர பகவான் ஜாதகத்தில் நீசமாக இருப்பவர்கள் மற்றும் சுக்ர திசை நடப்பவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் தோஷம் படிப்படியாக குறையும். இன்று ஸத் ப்ராம்மணருக்கு அல்லது அம்பாளுக்கு வெண்பட்டு நிற புடவை தானம் தாம்பூல தஷிணை கொடுப்பது அளவில்லாத பலனை தரும்.